சமுத்திரக்கனியின் அடுத்த அறிவிப்பு

`காலா’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள சமுத்திரக்கனி நடிப்பில், அடுத்ததாக `ஆண்தேவை’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதேநேரத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2′ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

Appa2

இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016-ஆம் வெளியான படம் `அப்பா’. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, நமோ நாராயணா, கேப்ரியல்லா சார்ல்டன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தான் இயக்கவிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார்.

தந்தையர் தினமான நேற்று தந்தையர் தின வாழ்த்துக்களுடன் `அப்பா-2′ படம் ஆரம்பமாகியிருப்பதாக சமுத்திரக்கனி போஸ்டருடன் அறிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com