சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Server-Sundaram

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `சக்க போடு போடு ராஜா’ போதிய வரவேற்பை பெறவில்லை. சந்தானம் நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போன இந்த படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ஆர்.பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

சந்தானம் தற்போது `மன்னவன் வந்தானடி’, `ஓடி ஓடி உழைக்கனும்’, `தில்லுக்கு துட்டு-2′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *