அரசியல் பின்னணியில் உருவாகும் “சர்கார்”

sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

சரியாக மாலை 6 மணிக்கு வெளியான சர்கார் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் ஹேஷ்டேக்குகள் விஜய் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றன. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். விஜய்யின் பின்னணியில் கட்டிடங்களில் மின்விளக்குகள் ஒலியும்படியாக அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்திற்கு சர்க்கார் (அரசாங்கம்) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.

படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன