‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

sarkar_second_look

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன