‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

santhanam

முன்னணி காமெடி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த சந்தானம் கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவர் ஹீரோவாக நடித்தாலும் தனது காமெடி எசன்ஸ் நிறைந்த கதைகளில் நடித்ததால் அப்படங்கள் வெற்றிப் பெற்றன.

இதற்கிடையே, சமீப காலமாக காமெடியை குறைத்துவிட்டு ஆக்‌ஷன் மற்றும் மாஸ் கலந்த வேடங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சந்தானத்தின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால், அவரது நடிப்பில் ரிலிஸிற்கு தயாராக இருக்கும் படங்களும் வெளியாகாமல் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படம் இந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படி தொடர்ந்து தனது படங்கள் சிக்கல்களை சந்தித்து வருவதால் சந்தானம் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன