எம்.ஜி.ஆருடன் நடிக்கும் சாயிஷா

sayesha

வனமகன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவரது நடிப்பில் ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். அவர்களின் கனவு திரைப்படமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ தற்போது அனிமேஷன் படமாக தயாராகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் அனிமேஷன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன