இமான் இசையில் பாடும் செந்தில் கணேஷ்

imman-senthil

விஜய் தொலைக்காட்சியின் “சூப்பர் சிங்கர் 6” போட்டியில் கலந்து கொண்டு மக்களிசை பாடல்களை மட்டுமே பாடி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு இறுதி போட்டியில் வெற்றியும் பெற்றவர் பாடகர் செந்தில் கணேஷ். இவருடைய மனைவி ராஜலட்சுமியும் இவருடன் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிசை பாடல்கள் மூலம் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்று அரையிறுதி வரை வெற்றி பெற்றார்.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற்றதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் செந்தில். இந்நிலையில் டி.இமான் அவர்களின் இசையிலும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் ஒரு பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை டி.இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன