மோசடி வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகை கைது

anisha2

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பவர் நடிகை அனிஷா. இவர் சில தொடர்களில் நடித்தும் வருகிறார். இவரது கணவர் சக்தி முருகன். இருவரும் இணைந்து சென்னையில் மின்சாதனப் பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் வரவு – செலவு பொறுப்பாளராக இருக்கும் நடிகை அனிஷா 37 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீதும் அவரது கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் நடிகை அனிஷாவையும், அவரது மைத்துனரையும் கைது செய்துள்ளனர்.

anisha

இதையடுத்து தலைமறைவான அனிஷாவின் கணவர் சக்தி முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே சக்தி முருகன் மீது இதே போன்றதொரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன