பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை

சமீப காலமாக திரை நட்சத்திரங்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகம் தற்கொலைகளில் ஈடுபடுகிறார்கள். தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமை, குடும்ப பிரச்சனைகள், காதல் தோல்வி என்று பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட நட்சத்திரங்களின் பட்டியல் ஏராளம்.

இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓளிபரப்பாகி வந்த வம்சம் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையான பிரியங்கா தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகி கணவருடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com