‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான்

dhanush-shahrukhan

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த டீசரை இதுவரை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வடசென்னை டீசர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஷாருக்கான், தனது நண்பரும் பன்முகத்திறமை கொண்டவருமான தனுஷின் புதிய பட டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன