கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

ShrutiHassan

முன்னணி பாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்க்ஸ்டரை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதி ஹாசன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குநர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

பொதுவாக இயக்குநர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குநர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன