சிபிராஜ் நடிக்கும் அடுத்த படம்

SIbi

சத்யா படத்திற்கு அடுத்து நடிகர் சிபிராஜ் நடித்துள்ள படம் ‘ரங்கா’. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமலும், முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் விரைவில் இப்படம் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் ‘மதுபானக்கடை’ படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் சிபிராஜ்.  ‘வட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஆக்‌ஷன் மற்றும் காதல் கதையாக இருக்கும் என்றுக் கூறப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன