சித்தார்த்துடன் இணையும் கேத்தரின் தெரசா

Siddharth-Catherine

`அவள்’ படத்தை தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் அடுத்ததாக `சைத்தான் கா பச்சா’ படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கின்றனர். படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் `அவள்’ படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன