நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு – ஜோதிகா

சிம்பு, ஜோதிகா இணைந்து ‘மன்மதன்’, ‘சரவணா’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

simbhu-jothika

இந்நிலையில் மொழி பட இயக்குனர் ராதா மோகனுடன் மீண்டும் இணைந்து ஜோதிகா ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜோதிகா ஜோடியாக நடிகர் விதார்த் நடிக்கும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியில் புகழ் பெற்ற வெற்றிப்படமான `தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன