வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

simbu-venkat

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச் சிவந்த வானம்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படம் 2019-ல் வெளியாக இருக்கிறது. படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள், படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

முன்னதாக வெங்கட் பிரபு சிம்பு, யுவனுடன் இணைந்து `பில்லா 3′ படத்தை இயக்கவிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் இது `பில்லா 3′ படம் இல்லை என்றும், புதுமையான கதை என்றும் வெங்கட் பிரபு விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த படம் தவிர்த்து `விடிவி 2′ மற்றும் சிம்பு இயக்கி, நடிக்கும் படம் என அடுத்த 3 வருடங்களுக்கு சிம்பு பிசியாகவிருக்கிறார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன