வில்லனாக நடிக்கும் சிம்பு

simbu-venkat

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அரசியலை மையப்படுத்திய படம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படமாகும்.

இந்நிலையில் படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் நடிப்புக்கு இந்தப் படம் தீனியாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே வெங்கட் பிரபுவின் `மங்காத்தா’ படத்தில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன