வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்

simran

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த சிமரன், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், சில புகைப்படங்களும் வைரலாக பரவியது.

இந்த நிலையில், பிக் பாஸ் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சிம்ரன், தான் எந்த டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், ”சில ஷோக்களில் நான் பங்கேற்க போவதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. போட்டோஷாப் மூலம் மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள் ஒரு குட் ஜாப். எனது அறிவுக்கு எட்டியபடி, சமீபத்தில் எந்த டிவி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. சமீபத்திய வருங்காலத்தில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதுமில்லை. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன