மகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா

magath

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர் பேசிய வார்த்தைகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வீட்டிலிருந்து மகத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், மகத்தை பாடகி ரம்யா ஒரு கட்டையால் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ரம்யாவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்கனவே வெளியேறியவர். ரம்யா செல்லமாகத்தான் அடிக்கிறார் என்றாலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மகத்தை சிம்பு கன்னத்தில் அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன