மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா

siva_nayanthara

சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாராவும் இணைந்துள்ளார். ஏற்கனவே `வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த நிலையில் இப்படம் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன