‘சீமராஜா’ டப்பிங் முடித்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan5

மூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடித்துள்ளார். நெப்போலியன், சூரி, யோகிபாபு, சதிஷ், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன