தம்பி ராமையாவிற்கு உதவும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan_2

சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் தம்பி ராமையா. பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறார். `மைனா’ படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றார். இதுதவிர, ‘மனு நீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது அவரது மகன் உமாபதி நடிப்பில் ‘மணியார் குடும்பம்’ படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்ததோடு படத்துக்கு இசையமைத்தும் இருக்கிறார் தம்பி ராமையா.

இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *