அனிருத்துக்கு அழைப்பு விடுத்த சிவகார்த்திகேயன்

siva-anirudh

நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ ஆகிய பல படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் ‘மான் கராத்தே’ படத்தில் அனிருத் ஒரு பாடலில் தோன்றி நடனமும் ஆடியிருப்பார்.

தற்போது நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ‘திட்டம் போட தெரியல’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலிலும் அனிருத் தோன்றி டான்ஸ் ஆடுகிறார். அனிருத்தின் டான்சை பார்த்த சிவகார்த்திகேயன் ‘எங்களுக்காக சீக்கிரமா ஒரு படம் பண்ணுங்க சார். இந்த வீடியோவில் ரொம்ப நல்லா இருக்கீங்க… அடுத்ததுக்காக நான் காத்திருக்கிறேன்’ என்று கூறி அனிருத்தை நடிக்க அழைத்துள்ளார். இதற்கு அனிருத் பதில் ஏதும் கூறாமல் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன