விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan5

மூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடித்துள்ளார். நெப்போலியன், சூரி, யோகிபாபு, சதிஷ், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தை போலாந்து நாட்டில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுவரை ரஜினி, அஜித் ஆகியோரின் திரைப்படம் மட்டும்தான் போலாந்து நாட்டில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. விஜய் நடித்த படங்கள் கூட இதுவரை போலாந்து நாட்டில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன