சிவகார்த்திகேயன் செலுத்திய நன்றிக்கடன்

sivakarthikeyan2

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். நடிப்பது மட்டுமல்லாது திரைப்படங்களில் பாடல்கள் பாடி பாடகராகவும் திகழும் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “கோலமாவு கோகிலா” படத்தில் அனிருத் இசையமைப்பில் “கல்யாண வயசு” பாடல் மூலம் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த பாடல் இப்பொழுது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடலாசிரியராக பெற்ற சம்பளத் தொகையை தனது முதல் படமான “மெரினா” படத்திற்கு பாடல்கள் எழுதிய மறைந்த “கவிஞர் நா.முத்துக்குமார்” குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நன்றி மறவாத இச்செய்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன