போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் உடம்பைப் பேணி காக்க வேண்டும் – சிவகுமார்

sivakumar

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சூலூர் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையும், அகரம் அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அகரம் அறக்கட்டளை தலைவர் நடிகர் சிவகுமார் தான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததாகவும், 14 வயதிலிருந்து யோகா செய்து வருவதாகவும், அறிவு அப்படியே தான் இருக்கும் என்றும், உடலுக்கு தான் வயதாகும் என்றும், எனவே உடம்பை நன்கு பேணிக்காக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மாணவர்கள் சாகும் வரை மது, சிகரெட் முதலான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக மாட்டேன் என்று சத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்றும், சாதனை புரிவதற்கு வயது முக்கியமல்ல, உடல்நலமே முக்கியம் என்றும் , உடல்நலத்தை பேணிக் காத்து சாதனைகள் புரியவேண்டும் என்றும், பெற்ற தாய், தந்தையே தெய்வம் என்றும், அனைவர் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *