சர்கார் போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ்

sarkar_second_look

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில், அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படத்திற்கு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முக்கியமாக பாமக இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. எனவே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன