ஒயிலாட்டம் ஆடிய சூரி

soori

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சூரிக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், அரண்மனை-2,மருது, ரஜினி முருகன்,சகலகலாவல்லவன் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய காமெடிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கார்த்தியுடன் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் சூரி அங்கு உறவினர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடியுள்ளார். அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன