ரஜினிகாந்த் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்

rajini-grandson

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளும் இயக்குனருமான செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்தநாள் நேற்று ரஜினியின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

rajini_grandson2

ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி வேத் என்ற மகன் பிறந்தார். இதன்பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு செளந்தர்யா-அஸ்வின் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *