தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா

surya_3

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்திழும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் அனைத்து படங்களும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இப்படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதன்முதலாக சூர்யா நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கடேஷ், நாகசைதன்யா, வருண் தேஜ் இணைந்து நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் சூர்யாவும் நடிக்க இருக்கிறார். 20 நிமிடங்கள் வந்தாலும் சூர்யாவுக்கு முக்கியமான வேடம் என்கிறார்கள். படத்தை நாகினா திரிநாத் ராவ் இயக்குகிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன