சூர்யாவின் பாராட்டத்தக்க செயல்

surya_3

நடிகர் சூர்யா தனது ‘அகரம்’ அறக்கட்டளையின் மூலம் எண்ணற்ற குழந்தைகளின் கல்விக்கும், ஏராளமானவர்களுக்கு சமூக சேவையும் செய்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி மாவட்டம் தோறும் 10 பள்ளிகளை தேர்ந்தெடுத்து கழிப்பறை வசதிகளை மேம்படுத்த முடிவெடுத்துள்ளார்.

மேலும் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும் முடிவு செய்துள்ள சூர்யா இதற்காக தனி குழுவையும் அமைத்துள்ளார். இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏழை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *