லண்டனில் தொடங்கியது சூர்யா படத்தின் பூஜை

surya-new

‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம் இன்று கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் 37வது படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று லண்டனில் நடந்தது. இந்த பூஜையில் சூர்யா, சாயிஷா, கே.வி.ஆனந்த் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொமன் இரானி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதும் இந்த படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன