கேரள முதல்வரின் பாதம் தொட்டு வணங்குகிறேன் – சூர்யா

surya_3

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கடந்த 6-ந்தேதி நீட் தேர்வு எழுதச்சென்றனர். மலையாள மொழி புரியாமல் தமிழக மாணவர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கேரள அரசு நீட் தேர்வு நடைபெறும் ஊர்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் ஆட்டோ நிறுத்தங்களில் தமிழ் மற்றும் மலையாள மொழி தெரிந்த தன்னார்வலர்களை பணி அமர்த்தி தமிழக மாணவர்கள் அவர்களின் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வழி வகுத்து கொடுத்தனர்.

குறிப்பாக எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல கிருஷ்ணசாமியின் உறவினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள போலீசாரும், அதிகாரிகளும் செய்து கொடுத்தனர்.

இவை அனைத்தும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின்பேரில் நடைபெற்றது. பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டை பதிவு செய்தார்.

இதுபோல ஏராளமான மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பினராயி விஜயனுக்கு பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகர் சூர்யாவும் பினராயி விஜயனை பாராட்டி பேசினார்.

suriya

நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவி செய்தனர். இதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மாணவர்கள் மன உளைச்சலின்றி தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் பினராயி விஜயன், மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் என்று பேசினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *