கேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்

sushant

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

திரையுலகை சேர்ந்த பலரும் கேரளாவிற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தோனி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கேரளவுக்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்வியை பார்த்த அவர், ரசிகரின் பெயரிலேயே அந்த நிதியினை அளித்துள்ளார். கேரளா மக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை வழங்கிய சுஷாந்த் சிங்கின் செயலை பார்த்து அனைவரும் நெகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன