நிச்சயதார்த்த தகவலை மறுத்துள்ள டாப்ஸி

taapsee-march-7

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் டாப்ஸியும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மேத்திஸும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

taapsee-pannu-mathias-boe

சமீபத்தில் குடும்பத்துடன் கோவாவிற்கு டாப்ஸி சென்றிருந்த போது அங்கு மேத்திஸும் வந்திருந்தார். இருவரும் நிச்சயதார்த்தத்திற்காகத் தான் கோவா வந்ததாகவும், அங்கு ரகசியமாக அவர்களுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள நடிகை டாப்ஸி தான் விடுமுறையை கழிக்கவே பெற்றோருடன் கோவா சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன