திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை வெளியிட்ட தபு

tabu

‘காதல் தேசம்’, ‘சிறைச்சாலை’, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் தபு, இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். சுமார் 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் தபுவுக்கு தற்போது 46 வயதாகிறது. இருப்பினும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், தான் திருமணம் செய்துகொள்ளாமல் போனதற்கு தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியே காரணம் என்று நடிகை தபு கூறியுள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

எனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான். நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார்.

அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன