மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் தமன்னா

Prabhu-Deva-Tamannah

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா – தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இருவரும் மீண்டும் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பார்த்திபன் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னா தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நிலையில் தமிழில் கடைசியாக விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே ‘ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன