திருமணம் குறித்து தமன்னா விளக்கம்

Tamanna

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா அமெரிக்க டாக்டர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள நடிகை தமன்னா சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவிட்டும் உள்ளார். அதில் முதலில் ஒரு நடிகர், பின் ஒரு கிரிக்கெட் வீரர், தற்போது அமெரிக்க டாக்டர் என்று தன்னைப் பற்றி வதந்திகள் வெளிவருவதாகவும், அவை உண்மை இல்லை என்றும், இப்பொழுது தான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்றும், திருமணம் நடக்கும் பொழுது அதனை தானே அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவிப்பேன் என்றும், இப்போதைக்கு தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன