அம்மாவான பிறகும் கதாநாயகியாக நடிக்கும் சினேகா

sneha

திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி வேடம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து பல ஹீரோயின்கள் திருமணத்திற்குப் பிறகும் ஹீரோயினாகவே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாகியுள்ள சினேகாவும், ஹீரோயினாக களம் இறங்குகிறார்.

திருமணத்திற்குப் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த சினேகா, குழந்தை பிறப்புக்காக நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது குழந்தை வளர்ந்துவிட்டதால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவர், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இதற்கிடையே, தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய பொலிவை கொண்டு வந்தவர் ஹீரோயினாக நடிப்பதற்காக முயன்று வந்தார். அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆம், சினேகா பிரஷாந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

பிரஷாந்தின் ’விரும்புகிறேன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சினேகா, ’பொன்னர் சங்கர்’, ’ஆயுதம்’ என பிரஷாந்துடன் நடித்தவர் தற்போது நான்காவது முறையாக பிரஷாந்துடன் நடிக்கிறார்.

ஆனால், இந்த படத்தில் மெயின் ஹீரோவாக ராம்சரண் நடிக்கிறார். ஆம், தெலுங்குப் படமான இப்படத்தை போயாதி ஸ்ரீனு என்பவர் இயக்க, விவேக் ஒபராய், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரஷாந்தும், சினேகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன