ஜெயலலிதாவுக்கு மகள் இருந்ததா? முக்கிய ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என்று பலதரப்பட்ட காலகட்டங்களில் பல பேர் கூறியுள்ளனர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே பிரியதர்ஷினி என்பவர் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறினார். பின்னர் ஜெயலலிதா இறந்தவுடன் மேலும் இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்று கண்டறிந்ததுடன் நீதிமன்றம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் அம்ருதா என்பவர் தான் ஜெயலலிதா மகள் என்று கூறியதுடன், ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வைணவ முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்த வேண்டும் என்றும் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்ருதா கூறுவது பொய் என்று அரசுத்தரப்பில் கூறியதுடன் , அம்ருதா பிறந்ததாக கூறும் 1980 ஆம் வருடம் ஃபிலிம் ஃபேர் விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்ட வீடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த வீடியோவில் ஜெயலலிதா கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன