பல நடிகர்கள் அஜித் காலைக் கழுவி வணங்க வேண்டும் – நடிகை ஆதங்கம்

ajith2

நடிகர் அஜீத் நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக, தமிழ் சினிமாவில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும்அஜீத்தின் நல்ல குணங்களை தொடர்ந்து பேசி வருவதை பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இருந்தபோது தெலுங்கு நடிகை மீனா வாசு அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மீனா வாசு , ‘இது ஒரு ரசிகையின் தருணம். அஜித்தை போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு இனிமையான, எளிமையான மனிதர். ஒரே ஒரு ஹிட் கொடுத்த நடிகர்கள் அதன்பின்னர் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் இருப்பதை நான் பல நடிகர்களிடம் பார்த்திருக்கிறேன். ஈகோ என்கிற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களெல்லாம் அஜித் அவர்களின் காலைக் கழுவி, தொட்டு வணங்கினால், அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும் என்பதே எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன