சிவகார்த்திகேயன் விருப்பத்தை நிராகரித்த தம்பி ராமையா

thambi-ramaiah-siva

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சட்டென்று உயர்ந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது பெயரிலேயே சொந்தமாக படங்கள் தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், காமெடி நடிகர் தம்பி ராமையா, தனது மகன் பூபதியை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘மணியார் குடும்பம்’ இப்படத்திற்கு இசையும் தம்பி ராமையா தான்.

இப்படத்தின் கதையை தம்பி ராமையா, சிவகார்த்திகேயனிடன் சொல்லிய போது, படத்தை நானே தயாரிக்கிறேன், என்று சிவகார்த்திகேயன் கூறினாராம். ஆனால், அதை நிராகரித்த தம்பி ராமையா, வேறு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதாக கூறி மறுத்துவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தால் தம்பி ராமையாவின் படத்திற்கு பெரிய அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து கோலிவுட்டில் அவரை பாராட்டி பேசி வருகிறார்களாம்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன