ரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு

thrisha

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, அஞ்சலி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கும் நிலையில் இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரஜினியுடன் திரிஷா இணைந்து நடிப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

இதன்மூலம் ரஜினியுடன் திரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற திரிஷாவின் நீண்டநாள் ஆசையும் தற்போது நிறைவேறியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன