வைரலாகும் திரிஷாவின் புதிய லுக்

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, அஞ்சலி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இப்படத்தில் இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

கோலிவுட்டின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட திரிஷா ரஜினியுடன் மட்டுமே நடிக்காமல் இருந்தார். ரஜினியுடன் நடிப்பது தன்னுடைய கனவு என்று கூறிய திரிஷாவின் கனவு தற்போது 16 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது. இந்நிலையில் தனது முடியின் அழகை மாற்றம் செய்து கொண்ட திரிஷாவின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரஜினி படத்திற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன