ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படும் த்ரிஷா

jayalalitha-thrisha

சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் வெளிவரத் துவங்கியுள்ளன. அவை மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை பலரும் படமாக எடுக்க தொடங்கினர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. மறைந்த நடிகை சாவித்ரியின் வழக்கை வரலாறு சமீபத்தில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறும் தற்போது ‘சஞ்சு’ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரது வழக்கை வரலாறும் படமாகிறது. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது. கபில்தேவ், ஷகீலா ஆகியோரது வழக்கை வரலாறும் படமாகிறது.

இந்நிலையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு படம் எடுக்கப்பட்டால் அதில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை த்ரிஷா விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு சிறுவயதிலிருந்தே ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன