டாப்ஸிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?

taapsee_pannu

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின் தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் டாப்ஸியின் கைகளில் ஏராளமான இந்தி படங்கள் உள்ளன. தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் டாப்ஸியும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மேத்திஸும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக வலம் வந்த நிலையில் கோவாவில் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று விட்டதாகவும், ரகசியமாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

taapsee-pannu-mathias-boe

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன