நீண்ட இடைவெளிக்கு பின் திரைப்படம் இயக்கும் டி.ராஜேந்தர்

T-Rajendar

என் தங்கை கல்யாணி, எங்க வீட்டு வேலன், ஒரு தாயின் சபதம், மோனிஷா என் மோனாலிசா போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் கடைசியாக 2007 ஆம் ஆண்டு வீராசாமி படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பின் அவரது இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார். ‘இன்றையக் காதல் டா..!’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ சார்பில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகிறது. நமீதா லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, விடிவி கணேஷ், இளவரசன் மற்றும் பல புது முகங்கள் நடிக்கிறார்கள். முழுக்க காதல் சம்பந்தப்பட்டதாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன