காதலில் விழுந்தாரா திரிஷா?

trisha

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்கள் திரிஷாவின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன