ரஜினிக்கு ஜோடியாகும் திரிஷா

Trisha-Rajini

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, அஞ்சலி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கும் நிலையில் இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற திரிஷாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன