திருமணம் குறித்த கேள்விக்கு த்ரிஷாவின் ரியாக்ஷன்

trisha

திரை உலகில் நீண்ட நாட்களாக நிலைத்து இருப்பவர் திரிஷா. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு திரிஷா டுவிட்டரில் பதில் அளித்தார். அவருடைய முக்கிய பதில்கள் இவை…

“மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, நான் செல்ல விரும்பும் இடம், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் தான். பள்ளிப்பருவத்தில் எனது பட்டப் பெயர் ‘டெரர்’.

நான் எப்போதுமே போன் அழைப்புகளை உடனே எடுப்பது இல்லை. தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்த ‘96’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஷாப்பிங் செல்வது எனக்கு பிடிக்காது. அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை.

இவ்வாறு திரிஷா பதில் அளித்துள்ளார். திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட போது, “உங்கள் வயது என்ன” என்று எதிர் கேள்வி கேட்டு சமாளித்து விட்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *