தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி கைது

nilani

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன